நல்லிணக்கமும் பாதுகாப்பும் நாட்டிற்கு மிக அவசியம்

நம்பிக்ைகயை கட்டியெழுப்பி நாட்டை சீராக வழிப்படுத்துவதே இலக்கு

நல்லிணக்கமும் பாதுகாப்பும் நாட்டிற்கு மிக அவசியமாகும். அவை பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நல்லிணக்கம் சாத்தியமில்லையென்றால் ஏப்ரல் 21இல் நாட்டில் இரத்த ஆறு ஓடியிருக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இருந்த பிரச்சினையோடு புதிய பிரச்சினையை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. இரண்டுக்கும் தீர்வு காணும் பலம் எமக்குண்டு. அதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றார். தேசிய சமாதானப் பேரவையின் நிகழ்வு நேற்று கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. அரசியல் பிரமுகர்கள் மதத் தலைவர்கள் நாட்டின் கல்விமான்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்:

நாட்டில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே அவசியம். நல்லிணக்கத்தை உருவாக்குவது தொடர்பில் எமக்கு தென்னாபிரிக்காவின் அனுபவமுள்ளது.

நாட்டின் சகல மக்களினதும் சகவாழ்வு, ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புதல், நீதிமன்றத்தின் சுயாதீனம், பாராளுமன்றத்தைப் பலப்படுத்துதல், தமிழில் தேசிய கீதம் என அனைத்திலும் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனூடான பிரச்சினைகளுக்கு நாம் வெற்றிகரமாக முகம் கொடுத்துள்ளோம். நாட்டில் சட்டத்தை நிலைநாட்டுவது தொடர்பில் பல பிரச்சினைகள் உள்ளன. இவையனைத்தையும் நிவர்த்திப்பதே எமது அடுத்தகட்ட செயற்பாடாகும்.

எமது நடவடிக்கைகளுக்கு சிலர் ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை, எதிர்ப்புகளும் வருகின்றன. சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. என சிலர் கூறிவருகின்றனர். இன்னும் சிலர் உண்மை வெளிப்படுத்தப்படும் போது அது எமது படையினருக்கு பாதகமாக அமையும் எனக் கூறுகின்றனர்.

இந்த சகல தர்க்கங்களையும் ஒருபுறம் வைத்துவிட்டு என்ன நடந்துள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். இந்த கேள்விகளுக்குப் பதிலளித்து முன்செல்ல வேண்டியுள்ளது.

அடிப்படைவாதம் நாட்டில் வெற்றி பெறவில்லை. இது எமது நல்லிணக்கத்துக்கான வெற்றி. எனினும் இதில் நாம் திருப்தி அடைய முடியாது. மீதுமுள்ளவற்றிற்கு நாம் தீர்வு காண வேண்டியுள்ளது.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 06/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை