சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வட கொரியாவுக்கு விஜயம்

2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீனத் தலைவர் ஒருவரின் முதல் விஜயமாக வட கொரியா பயணமாகி இருக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங், வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னை நேற்று சந்தித்தார்.

இதற்கு முன்னர் சீனாவில் இரு தலைவர்களும் நான்கு தடவைகள் சந்தித்த நிலையில், இந்த புதிய சந்திப்பில் ஸ்தம்பித்திருக்கும் வட கொரிய அணுத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை, அதேபோன்று பொருளாதார விவகாரம் குறித்து கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

தனது பிரதான வர்த்தகக் கூட்டாளியான சீனாவுடனான உறவு வட கொரியாவுக்கு மிக முக்கியமானதாகும். ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு ஒரு வார காலம் முன்னதாக இந்த சந்திப்பு நடைபெறுகிறது. ஜி20 மாநாட்டில் ஷி ஜின்பிங் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசவுள்ளார்.

வட கொரியாவின் அணு ஆயுதங்கள் பயன்பாடு குறித்தான வியட்நாம் தலைநகர் ஹனாயில் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு ஒப்பந்தமும் எட்டப்படாமல் முடிவடைந்த பின்னர் கிம்மை முதல்முறையாக ஷி ஜின்பிங் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 06/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை