பாரசீக வளைகுடா நுழைவாயிலில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்

மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ள நேரத்தில் இரண்டு எண்ணெய்த் தாங்கி கப்பல்கள் மீது பாரசீக வளைகுடாவின் நுழைவாயிலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் விலைகள் அதிகரிக்கக் கூடுமென எதிர்வு கூறப்படுகிறது.

பாரசீக வளைகுடாவில் ஹொர்முஸ் நீரிணைக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை

ஹன்னாபின் செயற்பாட்டால் இயங்கிய கப்பலொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அங்கு இடம்பெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாகும். உலகில் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களில் 40 சதவீத கப்பல்கள் ஹொர்முஸ் நீரிணையூடாகவே செல்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்புக்கும் ஈரானிய தலைவர்களுக்கும் நண்பரான ஜப்பானிய பிரதமர் சின்ஸோ அபே மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தணிக்கும் நோக்கில் அங்கு சென்றுள்ள நேரத்திலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மேற்படி தாக்குதலுக்கு எந்த நாடு பொறுப்பு என்று அமெரிக்காவுக்கு தெரிந்த போதிலும் அது மேலதிக விவரங்களை தெரிவிக்க விரும்பவில்லையென்று அமெரிக்க அதிகாரியொருவர் கூறினார். இந்த பிரதேசத்தில் கடந்த மாதம் கப்பல்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னணியில் ஈரானே இருந்துள்ளது என்று அமெரிக்காவும் சவூதி அதிகாரிகளும் கூறுகின்றனர்.

மே மாத முற்பகுதியில் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகள் மீது தடைகளை இறுக்கியதையடுத்து மத்திய கிழக்கில் சர்ச்சை நிலை தோன்றியுள்ளது. ஈரான் அணுகுண்டை தயாரிப்பதை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தடை விதிக்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sat, 06/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை