பாடசாலை பாதுகாப்புக்கு பெற்றோரை அழைக்க வேண்டியதில்லை

கல்வி அமைச்சு அறிவிப்பு

பாடசாலைகளின் பாதுகாப்புக்கு தற்போது நடைமுறையிலுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக உள்ளதால் பாடசாலையின் பாதுகாப்புக்காக இனிமேலும் பெற்றோரை அழைக்கவேண்டிய தேவையில்லையென

கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க சகல மாகாண பிரதான செயலாளர்கள், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள், மகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், ஆகியோருக்கு நேற்று விசேட கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலையடுத்து சகல பாடசாலைகளுக்கும் இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அத்துடன் கல்வி அமைச்சின் 25/2019 சுற்று நிருபத்தின் பிரகாரம் பெற்றோரும் பாடசாலையின் பாதுகாப்புக்காக அழைக்கப்படிருந்தனர். பெற்றோர், அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய சுழற்சி முறையில் பாதுகாப்பு கடமையில் இதுவரை ஈடுபட்டுவந்தனர்.

இன்று முதல் பெற்றோரை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டியதில்லை என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

Fri, 06/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை