இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

முதலிடத்தில் நியூசிலாந்து மூன்றாமிடத்துக்கு முன்னேறிய இந்தியா

நாட்டிங்காமில் நடைபெற இருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு இந்தியா -- நியூசிலாந்து அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலகக் கிண்ண லீக் ஆட்டம் நாட்டிங்காமில் நேற்று நடைபெற இருந்தது. ஆனால் நேற்றுமுன்தினம் இருந்து நாட்டிங்காமில் கடும் மழை பெய்து வந்தது. இதனால் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழும்பியது.

போட்டிக்கான நாணயச்சுழற்சி சரியாக 2.30 சுண்டப்படும். அப்போது மழை பெய்யவில்லை. ஆனால் மேகம் கருமையாக திரண்டு இருந்தது. இதனால் அரைமணி நேரம் கழித்து, சூழ்நிலையை பார்த்து நாணயம் சுண்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு அறிவித்த மறுநிமிடத்தில் இருந்து கனமழை பெய்யத் தொடங்கியது. இலங்கை நேரப்படி போட்டி தொடங்கும் மதியம் 3 மணியில் இருந்து இரவு 7.40 மணி வரை மழை ஓயவில்லை. இதனால் போட்டி கைவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆகவே, நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன. நியூசிலாந்து அணி 7 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது .அதேநேரம் இந்திய அணி 5 புள்ளிகள் பெற்று தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறியது.இந்த உலக கிண்ண போட்டியில் நான்கு போட்டிகள் மழை காரணமாக இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வீதம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியும் கைவிடப்பட்ட நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபை மேலதிக நாளை ஒதுக்காததால் மேலும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் நியூசிலாந்து அணி எதிர்வரும் 19ம் திகதி தென்னாபிரிக்க அணியுடன் மோதவுள்ளது.அத்துடன் நியூசிலாந்து அணி 2015 ம் ஆணடு உலக கிண்ண போட்டியில் இரண்டாமிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.4 போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இன்னும் 18 போட்டிகள் நடைபெறவுள்ளமை தெரிந்ததே.

Fri, 06/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை