பாராளுமன்றத்தை கலைக்க ஐ.ம.சு.மு முழு ஒத்துழைப்பு

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் நடத்தும் யோசனையை ஐ.தே.க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதற்கு ஐ.ம.சு.முழு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார்.

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையையடுத்து பாராளுமன்றத்தை கலைத்து துரிதமாக பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டுமெனப் பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு, தாக்குதலுக்கான முழுப் பொறுப்பை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பு மீது சுமத்த முயற்சி

நடைபெறுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்படும் அரசியல்வாதிகளை ஜனாதிபதி பாதுகாப்பதாக மக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலுக்குச் செல்வதே உகந்ததாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.(பா)

 

Wed, 06/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை