அமெரிக்காவுடன் ஈரான் போரை விரும்பவில்லை

ஹஸன் ரூஹானி

ஈரான் எப்போதும் அமெரிக்காவுடன் போரை விரும்பியதில்லை என்று அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சர்வதேச அளவில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் ஈரானுடன் தங்களுக்கு போர் செய்யும் விரும்பம் இல்லை என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுடன் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தொலைப்பேசியில் அமெரிக்க – ஈரான் மோதல் குறித்து உரையாடியுள்ளார்.

அந்த உரையாடலில், “ஈரான் அதன் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. அமெரிக்கா உட்பட எந்த நாடுடனும் ஈரான் போரை விரும்பவில்லை. நாங்கள் எப்போதும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உறுதியுடன் இருக்கிறது” என்று ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. இப்படி தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் மீதும் அதன் முக்கிய தலைவர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடையை டிரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 06/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை