சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்

சவளக்கடை வீரத்திடல் எவென்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 12ஆவது ஆண்டு நிறைவு மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

இப்போட்டி அணிக்கு 7பேர் கொண்ட 5ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட இறுதி சுற்றுக்கு சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகமும், 15ஆம் கொளனி சென்றல் விளையாட்டுக் கழகமும் இறுதி சுற்றுக்கு தெரிவானது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்படுத்தாடி 5 விக்கெட்களை இழந்து 55 ஒட்டங்களை பெற்றது. பதிலுக்குத் துடுப்படுத்தாடிய 15ஆம் கொளனி சென்றல் விளையாட்டுக் கழகம் 4.2ஒவர் நிறைவில் சகல விக்கெட்களை இழந்து 36 ஒட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

வெற்றிபெற்ற சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்திற்கு பத்தாயிரம் ரூபாய் காசோலையும் வெற்றிக் கிண்ணமும் வீரர்களுக்கு பதக்கமும், இரண்டாம் இடத்தை பெற்ற 15ஆம் கொளனி சென்றல் விளையாட்டுக் கழகத்திற்கு ஏழாயிரத்து ஐந்நூறு ரூபாய் காசோலையும் கிண்ணமும் வீரர்களுக்கு பதக்கமும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வு வீரத்திடல் எவென்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.ஐ.எம்.நிஸாம் தலைமையில் சவளக்கடை 5ஆம் கொளனி அமீர் அலி பொது மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.வீ.நவாஸ், நேத்தா அன்ஸார் குறூப் நிறுவனத்தின் தலைவர் என்.ரீ.அன்ஸார், நாவிதன்வெளி அமைதிப்புயல் கலை மன்றத்தின் அதிபர் ஏ.எல்.ஏ.இம்தியாஸ், நாவிதன்வெளி ஊடாக வலையமைப்பின் தலைவர் எம்.நதீர், உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

சவளக்கடை குறூப் நிருபர்

Thu, 06/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை