சம்பியன்ஸ் லீக் லிவர்பூல் வசம்

மொஹமட் சலாஹ்வின் ஆரம்ப கோல் மற்றும் டிவொக் ஒரிகியின் பிந்திய கோல்கள் மூலம் டொட்டன்ஹம் ஹொட்ஸ்புர் அணியை 2–0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி லிவர்பூல் கழகம் ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரித்தது.

இரு இங்கிலாந்து கழகங்களுக்கு இடையிலான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டின் வன்டா மெட்ரோபொலிடானோவில் அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கடந்த முறை இறுதிப் போட்டியில் ரியெல் மெட்ரிட் அணியிடம் தோல்வி அடைந்து கிண்ணத்தை பறிகொடுத்த லிவர்பூல் மற்றொரு முயற்சியாகவே இம்முறை களமிறங்கியதோடு டொட்டன்ஹம் ஐரோப்பிய கிண்ணத்தை வெல்லும் முதல் முயற்சியாக களமிறங்கியது.

எனினும் போட்டி ஆரம்பித்து இரண்டாவது நிமிடத்திலேயே மூசா சிசிசோகோவின் கையில் பந்து பட்டதால் லிவரபூலுக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. மொஹமட் சலாஹ் அந்த வாய்ப்பைக் கொண்டு முதல் கோலை புகுத்தினார்.

இந்நிலையில் 87 ஆவது டிவொக் ஒரிகி லிவர்பூல் அணிக்காக மற்றொரு கோலை புகுத்தி அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Mon, 06/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை