சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டம்: ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டம்

சந்தேக நபர்களை சீனாவுக்கு அனுப்பும் சட்டத்திற்கு எதிராக ஹொங்கொங்கில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஹொங்கொங்கில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவான மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக உள்ளது.

இந்த சட்ட திருத்தத்தை வரும் ஜூலை மாதத்திற்கு முன்னர் நிறைவேற்றுவதற்கு ஹொங்கொங் தலைவர் கர்ரி லாம் முயற்சித்துள்ளார். சீன பிரதான நிலத்திற்கு நாடுகடத்தும் இந்த சட்டத்தின் மூலம் மத மற்றும் அரசியல் அடக்குமுறையில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாக ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும் இது நீதித்துறையில் சீனாவின் தலையீடாக அமையும் என்று இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் குறிப்பிடுகின்றனர். கடும் வெய்யிலுக்கு மத்தியில் வெள்ளை உடை அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். சிலர் ஹொங்கொங் தலைவரை பதவி விலகும்படியும் கோசம் எழுப்பினர்.

முன்னாள் பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹொங்கொங் “ஒரு நாடு, இரு முறைகள்” என்ற கொள்கையின் கீழ் 1997 ஆம் ஆண்டு சீன நிர்வாகத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.

சொந்தமாக சட்டங்களைக் கொண்டிருக்கும் ஹொங்கொங் தனது பிரதான நிலமான சீன மக்களை விடவும் அதிக சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர்.

Mon, 06/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை