பண்டைய எகிப்து சிலையின் ஏலத்தை தடுக்க கோரிக்கை

லண்டனில் நடைபெறவுள்ள பண்டைய மன்னர் துட்டன்காமன் சிலையின் ஏல விற்பனையை தடுக்கும்படியும் அதனை திருப்பித் தரும்படியும் எகிப்து பிரிட்டனைக் கேட்டுக்கொண்டுள்ளது.

28.5 சென்டிமீற்றர் உயர் கொண்ட 3,000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான பண்டைய பாரோவின் தலைப்பகுதியைக் கொண்ட பழுப்பு நிறச் சிலை கிறிஸ்டிஸ் ஏல மண்டபத்தில் வரும் ஜுலை 4 ஆம் திகதி ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிலை 5.1 மில்லியன் டொலருக்கு அதிக தொகைக்கு விலைபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமன்றி கிறிஸ்டிஸ் ஏல மண்டபத்தில் ஏலத்தில் விடப்படவிருக்கும் அனைத்து பண்டைய எகிப்து பொருட்களும் தடுக்கப்பட வேண்டும் என்று எகிப்து வெளியுறவு அமைச்சு கோரியுள்ளது.

இந்த ஏல விற்பனையை நிறுத்துவதற்கு ஐ.நா கலாசார அமைப்பான யுனேஸ்கோவுக்கும் எகிப்து கோரிக்கை விடுத்துள்ளது.

Wed, 06/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை