இந்தோனேசியாவில் எரிமலைச் சீற்றம்

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள எரிமலை ஒன்று சாம்பல் புகையை கக்கியதை அடுத்து அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் அச்சமடைந்திருப்பதோடு எரிமலை வெடிப்பு ஒன்று பற்றி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு வெடித்த சினபங் எரிமலை கடந்த ஞாயிறுக்கிழமை சுமார் ஒன்பது நிமிடங்கள் சிற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் 7 கிலோமீற்றர் உயரத்திற்கு சாம்பல் புகையை கக்கியுள்ளது.

இதில் எவருக்கு பாதிப்பு ஏற்படாத போதும் புதிய எரிமலை வெடிப்பொன்றுக்கான சாத்தியம் பற்றி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

“இந்த வெப்புக்குப் பின்னர் நள்ளிரவு தொடக்கம் காலை 6 மணி வரை சிறு சிறு வெடிப்புகள் பதிவாயின” என்று சின்பங் எரிமலை கண்காணிப்பகத்தின் விஞ்ஞானிகளில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

2,460 மீற்றர் உயரம் கொண்ட சின்பங் மலை இந்தோனேசியாவில் அதிகம் இயக்கம் கொண்ட எரிமலைகளில் ஒன்றாகும். எனினும் 2010 ஆம் ஆண்டு அது சீற்றம் காண்பதற்கு முன் நான்கு தசாப்தங்களாக அமைதியாக இருந்தது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தோனேசியாவில் சுமார் 130 எரிமலைகள் இயக்கம் கொண்டதாக உள்ளன.

Tue, 06/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை