முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியமைக்கு புளொட் பாராட்டு

நெருக்கடியான நேரத்தில் ஒற்றுமையாக செயற்பட்டு, இனத்தின் நன்மைக்காக எந்த தியாகத்தையும் செய்வோம் என்பதை நிரூபித்துள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளைப் பாராட்டுவதாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் ஜனநாயக ரீதியான குரலை இனவாத சக்திகள் முடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமையென

ஒன்று அல்ல. வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு விதமாக இனவாதமும் மதவாதமும் அரங்கேற்றப்பட்டு இனக்கலவரமும் மதக்கலவரமும் ஏற்படுத்தப்பட்ட நாட்களை இலகுவில் மறந்துவிட முடியாது. இப்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடியொற்றி இனவாத நாடகமொன்று அரங்கேற்றப்படுகின்றது.இதற்கு முன்பதாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்கள் இன வன்முறைகள் போன்று இப்போது முஸ்லிம் மக்கள் மீதும் மேற்கொள்ளப்படுகின்றது. மட்டுமல்லாது தீர விசாரணைகள் இன்றி குற்றச்சாட்டுகளின் ஊடாக முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளிவிடப்பட்டுள்ளனர்.மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அனைவரையும் கட்சி பேதமின்றி ஒன்றுபட்ட தீர்மானம் ஒன்றை எடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளனர்.

அவர்கள் அமைச்சுப்பதவிகளை துறந்தபோதும் மக்களின் பிரதிநிதிகளாக தொடர்ந்தும் பாராளுமன்றில் குரல் கொடுக்கும் வல்லமையுடனேயே இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Wed, 06/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை