அவன்கார்ட் மோசடி வழக்கு;

சீராய்வு மனு தொடர்பான தீர்மானம் ஜுலை 26

அவன்கார்ட் மோசடி வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த சீராய்வு மனு தொடர்பான தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் ஜுலை 26 ஆம் திகதி வழங்கவுள்ளது.

அதேநேரம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக அவன்கார்ட் மோசடி வழக்கு தொடர்பான கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகளை நிறுத்தும் இடைக்கால உத்தரவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் ஜுலை 27 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.

அவான்ட்கார்ட் கடன் சேவைகள் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை ஒன்றை நடத்திச் செல்ல முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ மற்றும் 7 பேர்

அனுமதித்தன் மூலம் அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச மற்றும் மோசடி குற்றச் செயல்கள் ஆணைக்குழு மேற்கூறிய 7 பேர் மீதும் வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதனையடுத்து தான் எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனைகளை விவாதத்துக்கு எடுக்க பிரதான நீதிவான் அனுமதி மறுத்ததையடுத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சீராய்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Sat, 06/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை