சஹ்ரானின் குண்டுகளால் அடிப்படைவாதத்தை அறிந்துக்கொள்ள முடிந்தது

சஹ்ரானின் குண்டுகள் நாட்டுக்கு ஆசீர்வாதமாக அமைந்துள்ளன. இதன் மூலமே நாட்டில் காணப்பட்ட அடிப்படைவாதத்தை அறிந்துகொள்ள முடிந்தது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

குருநாகல் வைத்தியர் ஷாபி சஹாப்தீன் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படுமாகவிருந்தால் அது சஹரானின் குண்டை விடவும் பாரியளவு சவால்களுக்கு உரியதாக இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

பயங்காரவாத தடுப்பு, தற்காலிக ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு

உரையாற்றும் போதே அத்துரலிய ரத்ன தேரர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பயங்கரவாத அமைப்புகளை தடை செய்வதன் ஊடாக மாத்திரம் பிரச்சினை முடிந்துவிடுமா? அந்த அமைப்புகள் மாத்திரமா பிரச்சினைகளுக்குறியது என்பது தொடர்பாக நாங்கள் கலந்துரையாட வேண்டும். இன்று முழு மத்திய கிழக்கு வலயத்திலும் மேற்குலக நாடுகளுக்கு நெருக்கமான நாடுகளை தவிர மற்றைய நாடுகள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளாகும்.

ஆப்கானிஸ்தான் முற்றாக அழிவடைந்த நாடு, பாகிஸ்தான் கட்டியெழுப்பப்படும் நாடாக இருந்தாலும் கிராமிய மக்கள் வாழும் பிரதேசங்கள் பயங்கரவாதத்திற்குள் சிக்கியுள்ளது. இவ்வாறான பாரிய நாடுகள் எவ்வாறு பயங்கரவாதத்திற்குள் சிக்கியது.

நாங்கள் சஹ்ரானின் குண்டு தொடர்பாகவே கதைக்கின்றோம். அதனை இலங்கைக்கு கிடைத்த ஆசீர்வாதமாகவே பார்க்க வேண்டியுள்ளது. சஹ்ரானின் குண்டால் தான் இந்த அடிப்படைவாதம் வெளியில் வர ஆரம்பித்துள்ளது. இல்லாவிட்டால் இதனை அறிந்திருக்க மாட்டோம். தற்போது அதனால் இஸ்லாம் பயங்கரவாதத்தின் பாரதூரமான தன்மையை அறிந்துள்ளோம். குண்டு தாக்குதலை நடத்தியவர்களில் இருவர் கோடிஸ்வரரின் பிள்ளைகளாகும். அவர்கள் வறுமையிலிருந்து குண்டு தாக்குதலை நடத்தவில்லை. செல்வந்தர்கள் எவ்வாறு இப்படி மாறினார்கள். இந்த அடிப்படைவாதத்தில் தெளிவான நோக்கு இருக்கின்றது.

இதேவேளை வைத்தியர் ஷாபி சஹாப்தீனின் சம்பவம் தற்போது உறுதியாகும் நிலையில் இருக்கின்றது. அதனை பயமின்றி கூறுகின்றேன். அது உறுதியாவது பலோப்பியன் டீயூபை பரிசோதிப்பதன் மூலம் அல்ல. அவர் முஸ்லிம்களையும் சத்திரச் சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளார். சிங்களவர்களையும் சத்திரச் சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளார்.

அவர் ஒரு வருடத்தில் 100 பேருக்கு சிகிச்சை செய்துள்ளார் என்றால் அவர்களில் 30 பேர் முஸ்லிம்களாக இருப்பார்களாக இருந்தால் அந்த 30 பேருக்கும் மீண்டும் குழந்தை கிடைத்திருக்கின்றது. ஆனால் சிங்கள தாய்மாருக்கு குழந்தை கிடைக்கவில்லை. சிசேரியன் சிகிச்சையை மேற்கொள்வதற்கு 45 நிமிடங்கள் தேவையென்றால் இவருக்கு 15 நிமிடங்களே ஆகின்றன. இது விசாரணைகளில் இருக்கின்றது. ஒருவர் இருவர் விசாரணைகளை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர். சுகாதார அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இவர்கள் அஞ்ச தேவையில்லை. ஷாபி சஹாப்தீன் போன்று 5 , 6 வீதமானவர்ககள் இருக்கின்றனர். ஷாபி சஹாப்தீன் சிங்கள தாய்மாரில் 58 வீதமானவர்களுக்கு சிசேரியன் சத்திரச் சிகிச்சை செய்துள்ளார். நாங்கள் நடு நிலையான பரிசோதனைக்கு செல்ல வேண்டும். இவை பணத்திற்காக செய்யப்படுகின்றது. இந்த அடிப்படைவாதத்திற்குள் முஸ்லிம் மக்கள் இலக்காகியுள்ளனர் என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Sat, 06/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை