வியாழேந்திரன் எம்.பியும் உண்ணாவிரதத்தை கைவிட்டார்

ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர்கள் தங்களது பதவிகளை துறந்துள்ள நிலையில் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் நீர் அருந்தி தமது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்கள்.

இவ் அடையாள உண்ணாவிரத்தை நேற்று (3) 4.45 மணியளவில் நீர் ஆகாரம் அருந்தி கைவிட்டார்கள்.

பதவி நீக்குவதற்கான அழுத்தங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்குவதற்கு நடாத்தப்படும் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட்டு நாட்டில் உக்கிரமடைந்த உணவு தவிர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனினால் முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் இளைஞர் ஒருவரும் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தினை ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரம்பித்தார்.

காந்தி பூங்கா முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் முன்னெடுத்துவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 3 ஆவது நாளாகவும் தொடந்து நேற்று நீடிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சனிக்கிழமை(1) காலை முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனின் மகன் டிலக்ஸன் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்தார்.

இப் போராட்டத்திற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் மற்றும் இந்தியாவையைச் சேர்ந்த மத குருமார்கள்,பௌத்த மதத்தலைவர்கள்,இளைஞர்கள் பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கினார்கள்.

இதன்போது மட்டக்களப்பு மக்கள் பட்டாசு கொளுத்தினார்கள். இதன்போது கலந்து கொண்ட மதகுருமார் இன்னுமொரு அரேபியாவை இலங்கையில் நிறுவதற்கு இடமளிக்கமாட்டோம் எனத் தெரிவித்தனர். கிழக்கை நல்லிணக்கம் எனும் போர்வையில் தமிழ்கட்சிகள் பற்றி வடகிழக்கு தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்

 

Tue, 06/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை