தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சீன அரசாங்கம் எச்சரிக்கை

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க வர்த்தகத் தடைகளுக்கு இணங்கும் வகையில் சீனாவுக்கு எதிராகச் செயல்பட்டால் அதன் தாக்கம் மோசமாக இருக்கும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவுடன் இருக்கும் வர்த்தகப் பங்காளித்துவத்தை முறித்துக்கொள்ளும் நிறுவனங்கள் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சீன உள்நாட்டு ஊடக அறிக்கை கூறியது.

சீன நிறுவனங்களுடன் வர்த்தக உடன்பாடுகளைக் கொண்டிருக்கும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் இன்டெல், குவல்கொம், மைக்ரோசொப்ட், சம்சுங் ஆகியவை அடங்கும். சீனா அதன் தொழில்நுட்பக் கட்டமைப்பைப் பாதுகாக்க ஒரு புதிய அமைப்பை உருவாக்கி வருவதாக தி பீபல்ஸ் டெய்லி பத்திரிகை குறிப்பிட்டது.

புத்தாக்கத் திறன்களை வலுப்படுத்தி, முக்கிய தொழில்நுட்ப மேம்பாடுகளைத் துரிதப்படுத்த சீனா ஒரு வலுவான பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் என்றும் அது தெரித்தது.

Tue, 06/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை