வெனிசுவேல நாட்டு கொலம்பிய எல்லைக்கு மக்கள் படையெடுப்பு

வெனிசுவேலாவின் கொலம்பிய நாட்டு எல்லை நான்கு மாதங்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து உணவு மற்றும் மருந்துகள் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கொலம்பியாவுக்கு படையெடுத்துள்ளனர்.

தலைநகர் கரகாஸுக்கு அருகில் உள்ள இரண்டு சர்வதேச பாலங்களில் வெனிசுவே மக்கள் கொலம்பிய அதிகாரிகளின் ஆவண சோதனைக்காக கூட்டமாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வெனிசுவேல எல்லை காவலர்கள் உதவினர்.

எதிர்க்கட்சியினர் அமெரிக்க ஆதரவு உதவிப் பொருட்களை நாட்டுக்குள் எடுத்துவர முயற்சித்ததை அடுத்து கடந்த பெப்ரவரி மாதம் வெனிசுவேலா எல்லைகளை மூடியது.

பல ஆண்டுகளாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெனிசுவேலாவில் அடிப்படை உணவுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. 2015 ஆம் ஆண்டு தொடக்கம் வெனிசுவேலாவில் இருந்து நான்கு மில்லியனுக்கு அதிகமானவர்கள் வெளியேறி இருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

வெனிசுவேல எதிர்க்கட்சித் தலைவரான ஜுவான் குவைடோ தம்மை இடைக்கால ஜனாதிபதியாக கடந்த ஜனவரியில் அறிவித்ததை அடுத்து அந்நாட்டின் அரசியல் பதற்றம் அதிகரித்தது. அமெரிக்கா மற்றும் பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகள் குவைடோவுக்கு ஆதரவு வெளியிட்டுள்ளன.

Mon, 06/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை