ஹொங்கொங்கிற்கு பிரிட்டன் கண்ணீர் புகை விற்க தடை

ஹொங்கொங் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த மோதல்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் கண்ணீர்ப்புகை, இரப்பர் தோட்டாக்கள் போன்றவற்றை ஹொங்கொங்கிற்கு ஏற்றுமதி செய்வதற்கான உரிமங்களைப் பிரிட்டன் தடைசெய்துள்ளது. ஹொங்கொங்கின் நிலைமை குறித்து பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜெரமி ஹன்ட் அக்கறை தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் விசாரணையின் முடிவுகளைக் கொண்டு எதிர்காலத்தில் ஹொங்கொங் பொலிஸ் அதிகாரிகளின் ஏற்றுமதி உரிம விண்ணப்பங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

Thu, 06/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை