டிரம்பிடமிருந்து கிடைத்த கடிதம் பற்றி புகழும் கிம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனுப்பிய தனிப்பட்ட கடிதத்தைப் பற்றி, வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் புகழ்ந்து பேசியுள்ளார்.

கடிதத்தில் என்ன எழுதப்பட்டது என்பது பற்றி தகவல் அளிக்கப்படவில்லை என வட கொரியாவின் அரச செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

கடிதத்தின் உள்ளடக்கம் மிகச் சிறப்பானது என்றும் அது பற்றித் தாம் பரிசீலனை செய்யவிருப்பதாகவும் கிம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. வட கொரியத் தலைவருக்கு அழகான ஒரு படிதத்தை அனுப்பியதாக டிரம்ப் இம்மாத ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

டிரம்பின் கடிதம் எப்போது அல்லது எவ்வாறு கிம்மிற்குக் கிடைத்தது என்ற எந்த விபரமும் வெளியாகவில்லை. இது பற்றி வெள்ளை மாளிகை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

டிரம்ப் மற்றும் கிம்மிற்கு இடையில் கடந்த பெப்ரவரியில் வியட்நாமில் இடம்பெற்ற சந்திப்பு ஸ்தம்பித்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தக் கடிதம் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வட கொரியா தனது அணு செயற்பாடுகளை கைவிட அமெரிக்கா வலியுறுத்துவதோடு வட கொரியா தன் மீதான பொருளாதார தடைகளை தளர்த்துவதற்கு வலியுறுத்தி வருகிறது.

எனினும் கிம் தொடர்பில் அண்மைய மாதங்களில் டிரம்ப் சாதகமான கருத்துகளையே வெளியிட்டு வருகிறார்.

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை