ஆப்கானில் இரு அமெரிக்க துருப்புகள் தாக்குதலில் பலி

இரு அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக நேட்டோ படை அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையில் புதிய சுற்று பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உதவி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நேட்டோ இந்த சம்பவம் குறித்து வேறு எந்த விபரத்தையும் வெளியிடவில்லை.

தெற்கு வர்தக் மாகாணத்தில் இரு அமெரிக்க துருப்புகளை கொன்றதாக தலிபான்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதலாலேயே துருப்புகள் கொல்லப்பட்டார்கள் என்பதை நேட்டோ உறுதி செய்யவில்லை.

எனினும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ஆப்கானிஸ்தான் பயணிக்கும் அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

வரும் செப்டெம்பர் 1ஆம் திகதிக்கு முன்னர் தலிபான்களுடன் அமைதி உடன்படிக்கையை எட்டுவது குறித்து பொம்பியோ நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த சம்பவத்துடன் இந்த ஆண்டில் இதுவரை ஆப்கானில் கொல்லப்பட்ட அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டில் 12 துருப்பினர் கொல்லப்பட்டனர்.

Thu, 06/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை