ரோஹித் சர்மாவின் அபார சதம் கைகொடுக்க இந்தியாவுக்கு வெற்றி

தென்னாபிரிக்காவுக்கு ஹெட்ரிக் தோல்வி

இந்திய அணி 228 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய அவ்வணி யின் ரோஹித் சர்மாவின் சதத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி உலக கிண்ண போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.மறுமுனையில் தென்னாபிரிக்க அணி தான் பங்கு கொண்ட மூன்று போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த முதல் அணியாக தெரிவானது.

இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தவான் 8 ஓட்டங்களை பெற்ற பொது ரபடாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.பின்னர் சர்மாவுடன் இணைந்த அணியின் தலைவர் கோலி தனக்கு உரித்தான பாணியில் நிதானமாக ஆடிய வேளையில் அவர் 34 பந்துகளை எதிர் கொண்டு 18 ஓட்டங்கள் பெற்ற நிலையில் பெஹலுவாயோ பந்தில் ஆட்டமிழந்து சென்றார்.

பின்னர் லோகேஷ் ராகுல் இணைந்தார் ரோஹித்துடன் அவரும் தனது பங்கிற்கு 42 பந்துகளை எதிர் கொண்டு 26 ஓட்டங்கள் பெற்றிருந்த போது ரபடாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் சர்மாவுடன் இணைந்தார் தோனி அவரும் இருவரும் தங்களுக்கு உரித்தான பாணியில் 4 ஆவது விக்கெட்டுக்காக 74 ஓட்டங்கள் பெற்றனர்.தோனி 34 ஓட்டங்கள் பெற்றார்.பின்னர் சர்மாவுடன் இணைந்தார் பாண்டியா அவரும் சர்மாவும் இணைந்து 47.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.இந்திய அணியின் தனியாளக நின்று 144 பந்து களை எதிர் கொண்டு 13 நான்கு ஓட்டங்கள் மற்றும் இரண்டு ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 122 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.பாண்டியா 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க வில்லை.

பந்து வீச்சில் ரபடா இரண்டு விக்கெட்டையும் மோரிஸ்,புஹலவோயோ ஆகியோர் தல ஒரு விக்கெட்டை பதம் பார்த்தனர்.தென்னாபிரிக்க அணி எதிர்வரும் 10 ம் திகதி மேற்கிந்திய தீவு அணியை எதிர்கொள்கிறது.

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், தென் ஆபிரிக்கா அணி இந்தியாவுக்கு 228 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கிண்ண கிரிக்கெட் திருவிழாவில் 7-வது நாளான நேற்று சவுத்தாம்டனில் நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆபிரிக்கா அணிகள் மோதிய ஆட்டத்தில்

நாணயச்சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பந்து வீசியது.

தொடக்க ஆட்டக்காரராக ஹஷிம் அம்லா மற்றும் குயின்டன் டி கொக் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி தென் ஆபிரிக்க துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி அளித்தனர்

இதனால் தென் ஆபிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஹஷிம் அம்லா 6 ஓட்டங்களுக்கும், குயின்டன் டி கொக் 10 ஓட்டங்களுக்கும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

அடுத்து வந்த துடுப்பாட்டவீரர்களும் இந்திய சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 50 ஓவர் முடிவில் தென் ஆபிரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 227 ஒட்டங்கள் குவித்தது. அதிக பட்சமாக அவ்வணியின் தலைவர் டு பிளசிஸ் 38 ஓட்டங்களும், சகல துறை வீரர் கிறிஸ் மோரிஸ் 42 ஓட்டங்களும் பெற்றதே கூடுதல் ஓட்டமாக இருந்தது.தென்னாபிரிக்க அணி சார்பாக இந்த போட்டியில் அரைச்சதம் கூட வீரர்கள் பெற தடுமாறியதை காணக்கூடிய தாக இருந்தது.

இந்திய அணி சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டையும், பும்ரா 2 விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

அத்துடன் ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்தவரை அதிவேகமாக 8 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய வீரரில் கோலி முதலிடத்தில் உள்ளார்.அதாவது விராட் கோலி 8 ஆயிரம் ஓட்டங்களை 175 இன்னிங்ஸில் எடுத்துள்ளார்.ஆனால் அவரது சாதனையை இந்த போட்டியில் ஹசிம் அம்லா எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்று ஆறு ஓட்டங்கள் பெற்றார்.

ஆனால் அவர் இந்த மைல் கல்லை எட்ட இன்னும் 84 ஓட்டங்கள் தேவை அவர் 172 போட்டிகளில் ஆடி 7916 ஓட்டங்கள் பெற்றுள்ளார், அவர் 8 ஆயிரம் ஓட்டங்களை குறைந்த இன்னிங்ஸில் எடுத்தவர் வரிசையில் கோலியை பின்னுக்கு தள்ளுவார். இப் போட்டியின் ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தெரிவானார்.

Thu, 06/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை