பூமியைப் போன்ற இரு கிரகங்கள் கண்டுபிடிப்பு

உயிர்வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் கொண்டதாக 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் சிறிய மற்றும் பழைய நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் இரு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நட்சத்திரம் குறைந்தது எட்டு பில்லியன் ஆண்டுகள் கொண்டதாக இருப்பதாகவும் அது எமது சூரியனை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வயது கொண்டது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். எனவே இதனை வலம் வரும் கிரகங்கள் மிகப் பழமையானவை என ஊகிக்கப்படுகிறது.

இது பற்றிய விபரம் ‘நெசனல் ஜோக்ரபி’ சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. இந்த கிரகங்களில் ஏற்கனவே உயிர்தோன்றி இருப்பதற்கான சாத்தியம் பற்றியும் விஞ்ஞானிகள் விபரித்துள்ளனர்.

நீர் இருப்பதற்கும் உயிர் வாழ்வதற்கும் பொருத்தமான தட்பவெப்பநிலை உள்ள இடத்தில் இருந்து அவை தனது நடசத்திரத்தை வலம்வருகின்றன. இந்தக் கிரகங்களின் இயக்கத்தை 3 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்த விஞ்ஞானிகள், சூரிய குடும்பத்தில் சூரியனை அருகில் சுற்றிவரும் பூமி உள்ளிட்ட கிரகங்களைப் போன்றே அவை இரண்டும் இயங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

Fri, 06/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை