போலி மாநாட்டில் ஏமாந்த ருவண்டா இளைஞர்கள்

இணையதளத்தில் பதிவுக் கட்டணம் செலுத்தி போலியான மாநாடு ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்று ஏமாந்தது குறித்து ருவாண்டா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடற் பயிற்சி மற்றும் செல்வம் பற்றி வாக்குறுதி அளிக்கப்பட்டு 5 டொலர் பதிவுக் கட்டணத்துடன் ஏற்பாட்டாளர்கள் இந்த மாநாட்டை நடத்த வாக்குறுதி அளித்துள்ளனர். இதனை நம்பி கிகாலி மாநாட்டு மண்டபம் ஒன்றில் குறைந்தது 2000 பேர் ஒன்று திரண்டுள்ளனர்.

அந்த மாநாட்டு மண்டபம் நிரம்பி வழிந்தபோதும் எந்த ஏற்பாட்டாளரும் வருகை தரவில்லை. இந்த மாநாட்டில் பங்கேற்றால் 197 டொலர்கள் வரை கிடைக்கும் என்று தமக்கு கூறியதாக அதில் பங்கேற்ற சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

சமூக தளத்தில் இந்த போலி மாநாடு பற்றி செய்தி பரவியதை அடுத்து பொலிஸார் மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும் அங்கு விரைந்துள்ளனர்.

இந்த இளைஞர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட இளைஞர் விவகார அமைச்சர் ரோஸ் மாரி, “இலகுவாக பணம் சம்பாதிக்கும் ஒன்றுமற்ற வாக்குறுதிகளை நம்புபவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்” என்று தெரிவித்தார்.

கொடுத்த பணத்தை திருப்பித் தரும்படி சில இளைஞர்கள் பொலிஸாருடனும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

Thu, 06/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை