முஸ்லிம்கள் பிளவுகளின்றி ஐக்கியத்துடன் வாழவேண்டும்

இந்த இக்கெட்டான கால கட்டத்தில் முஸ்லிம்கள் தங்களுக்கிடையே பிளவுகளின்றி ஐக்கியத்துடன் வாழ்வது மிகவும் அவசியமாகும்.அதேபோன்று ஏனைய சமூகத்தோடு சகவாழ்வுடனும் சகோதர புரிந்துணர்வுடனும் நல்லிண்ணத்துடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் புனித ஈதுல்பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தில் தெரிவித்துள்ளார்.

தொடரும் வாழ்த்துச் செய்தியில்,

மனிதனை மனிதனாக வாழ்வாங்கு வாழ வைப்பதற்கும் மனித வாழ்வை செம்மைப்படுத்துவதற்கும் நோன்பு மிக முக்கித்துவம் வாய்ந்தவையாகும்.

அதேபோன்று நோன்பானது ஏழையின் பிணி தீர்க்கக் கூடியவை. பாவக் கறைகளை அகற்றக் கூடியவை பிறர் துன்பம் விளைவித்தாலும் சகிப்புத் தன்மையாடு வாழ்வதற்கான நித்திய பூரணத்துவம் கொண்டவை எனப் பல சிறப்புக்கள் பொதிந்தவையே.

இந்த இனிய நன்நாளில் எம்மிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகளை மறந்து புரிந்துணர்வுடனும் புத்திசாதுரியத்துடனும் செயற்பட வேண்டும்.எமது மார்க்கத்தின் நெறிமுறைக்கு இசைந்தவாறு இந்நாட்டில் வாழும் ஏனைய மக்களையும் மதித்து எமது கலாசாரத்தின் உயர் விழுமியங்களையும் நபிகள் நாயகத்தின் அருட்குணங்களையும் இஸ்லாமிய புனிதர்களின் உத்தம செயல்களையும் தியாகங்களை உலகறியச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. எனவே, இதற்காக இலங்கை மக்களாகிய நாம் சகோதர் வாஞ்சையுடன் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

 

மாவத்தகம நிருபர்

Wed, 06/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை