‘நாஜி’ மரண முகாமில் தப்பிய கடைசி நபர் 96 வயதில் மரணம்

சொபிபோர் நாஜி மரண முகாமில் உயிர்தப்பிய கடைசியானவர் என்று நம்பப்படும் செமியோன் ரொசன்பெல்ட் தனது 96 வயதில் இஸ்ரேலில் மரணமடைந்தார்.

உக்ரைனில் பிறந்த ரொசன்பெல்ட் டெல் அவிவுக்கு அருகில் ஓய்வு இல்லம் ஒன்றில் மரணித்ததாக அவருக்கு உதவிகள் வழங்கிய ஜுவிஷ் ஏஜன்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சோவியட் படையில் பணியாற்றிய ரொசன்பெல்ட் 1941 இல் ஜெர்மனியால் பிடிபட்டு நாஜி ஆக்கிரமிப்பு போலந்தில் உள்ள மரண முகாமுக்கு அனுப்பப்பட்டார்.

எனினும் 1943 இல் சுமார் 300 கைதிகளுடன் இணைந்து அவரால் அங்கிருந்து தப்பிக்க முடிந்தது. இவ்வாறு தப்பியவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் அப்போதே மீண்டும் பிடிபட்டனர். இவ்வாறு தப்பிய 200 பேரில் 47 பேர் மாத்திரமே இரண்டாம் உலகப் போர் முடிவில் உயிர் தப்பினர்.

சொபிபோர் மரண முகாமில் 1942–43 காலப்பகுதியில் 250,000க்கும் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

Wed, 06/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை