இந்தியா 89 ஓட்டங்களால் வெற்றி மூன்றாமிடத்துக்கு முன்னேற்றம்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 22 ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி டக்வெர்த் லூவிஸ் முறைப்படி 89 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் 7 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது,அத்துடன் பாகிஸ்தான் அணி 3 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்துக்கு பின்னுக்கு சென்றது.

அதன் படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக இமாமுல் ஹக் மற்றும் பாக்கர் ஸமான் இருவரும் களமிறங்கினர் இருவரும் ஆடுவாரகள் என்ற நிலையில் ஹக் 7 ஓட்டங்களுக்கும் ஸமான் 62 ஓட்டங்களுக்கும் பாபர் அஸாம் 48 ஓட்ட்ஙகளுக்கும் ஹபீஸ் 9 ஓட்டங்களுக்கும் அணியின் தலைவர் சர்பிராஸ் அஹமட் 12 ஓட்டங்களுக்கும் மலிக் ஓட்டம் பெறாமலும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில்மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடை நிறுத்தப்பட்டு மீண்டும் 40 ஓவராக குறைக்கப்பட்டு 302 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு பாகிஸ்தான் அணி 136 ஓட்டங்களை 30 பந்துகளில் அடிக்க வேண்டும் என பணிக்கப்பட் நிலையில் அவ்வணி 40 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை பெற்று 89 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

சங்கர், பாண்டியா, யாதவ் ஆகியோர் தலா இரு விக்கெட்டை பதம் பார்த்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் 2.4 ஓவர்கள் வீசிய நிலையில் காயத்தால் வெளியேறிய அவர் களத்தடுப்பு செய்ய வரமாட்டார் என அறிவிக்கப்பட்டது.

ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். 4-வது பந்தை வீசியபோது அவரது காலின் தொடைப்பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை. ஆகவே 2.4 ஓவர்கள் வீசியதுடன் வெளியேறினார்.

இந்திய அணி டொக்டர் அவருக்கு உடனடி சிகிச்சை அளித்து போட்டிக்கு தயார்படுத்த முயன்றார். ஆனாலும் புவனேஷ்வர் குமாரால் காலை வலிமையாக ஊன்ற முடியவில்லை. இதனால் இப் போட்டியில் அவர் எஞ்சிய ஓவர்களை வீசமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் சிறப்பான சதத்துடன் 336 ஓட்டங்களைக் குவித்தது.

இதனிடையே, இந்திய அணி 45 ஓவர்கள் பந்துப் பரிமாற்றங்கள் முடிந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி சற்று நேரம் தாமதமானதுடன் பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடி முடித்துள்ளது.

அந்தவகையில் 50 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகளை இழந்து 336 ஓட்டங்களை இந்திய அணி பெற்றது.

அணி சார்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 3 ஆறு ஓட்டங்கள், 14 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 140 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன் விராட் கோஹ்லி 77 ஓட்டங்களையும், லோகேஸ் ராகுல் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் சார்பாக, மொஹம்மட் அமிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, ஹசன் அலி மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தெரிவானார்.

Mon, 06/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை