இலங்கை மின்சார சபைக்கு வருடாந்தம் 80 கோடி நட்டம்

இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து இலங்கை மின்சார சபைக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர் என மின்சாரத்தை பயன்படுத்துபர்கள் சங்கத்தின் இணைப்பாளர் சங்ஜீவ தம்மிக்க தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை  தற்போது  ஒரு மின்சார அலகுக்கு வழங்கப்பட்ட செலவு ரூ.18முதல் ரூ.23வரை அதிகரித்துள்ளது. மின்சாரம் செலவு  மற்றும் மின்சார கொள்வனவுச் செலவு ஆகியன அதிகரிப்பதற்கான பிரதான காரணம் அவசர கால நிலையில் மேற்கொள்ளப்படும் மின்சார கொள்வனவுகளில் ஏற்பட்ட ஊழல்கள் மற்றும் மோசடிகள் ஆகும்.

மத்திய வங்கி நிதிமுறி மோசடியை விடவும் இந்த மோசடி அதிகமாகும். மத்திய வங்கி மோசடி 13பில்லியன் ரூபாய்கள் ஆக இருந்தது. ஆனால் 13பில்லியனுக்கும் அதிகமான நிதி மோசடி ஆண்டுதோறும்  இலங்கை மின்சார சபையில் நடக்கிறது.

இந்த நிதி மோசடிகள் 2015இல் தொடங்கின. இலங்கை மின்சார சபை  மற்றும் மின்வலு எரிசக்தி அமைச்சு ஆகியவை இணைந்து இந்த நிதி மோசடிகளில் ஈடுபட்டுவருகின்றன. தனியார் மின் நிலையங்களில் இருந்து ஒரு குறுகிய கால அடிப்படையில் அறிமுகப்படுத்திய மின்சார கொள்வனவு மூலம் இந்த மோசடி ஆரம்பமானது.

இலங்கை மின்சக்தி சட்டத்தின் 43வது பிரிவின் கீழ் விலைமனுக்கோரல் முறைமை மூலம்  மின்சார கொள்வனவு மற்றும் மின்னுற்பத்தி நிலையங்கள் அமைத்தல் போன்றவற்றுக்கான நடைமுறைகள்  பின்பற்றப்பட வேண்டியிருந்தாலும், மின்சார சபை சட்டத்தை மீறுவதன் மூலம் மின் கட்டணத்தை அதிக விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்கிறது. இதற்காக முறையான அனுமதி பெறவில்லை.

2016ஆம் ஆண்டில் 100மெகாவாட் மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டது. அன்று ஆரம்பித்த கொள்வனவால் மோசடியும் பெரிதாகி இன்று  இந்த மோசடி 700மில்லியன் மெகாவாட் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை மின்சார சபையினால் 60பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடிகளைத் தவிர்ப்பதற்காகஇ இலங்கை மின்சார சபையானது இலாபகரமானது மற்றும் மின் கட்டணத்தை குறைக்க முடியும். ஆனால் அதை செய்வது இல்லை.

ஏ.எஸ்.எம்பிலிபிட்டிய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை இலங்கை மின்சார சபை கொள்வனவுசெய்துவருகின்றது. இந்த தனியார் நிறுவனத்திலிருந்து 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பத்து வருடங்களாக  இவ்வாறு மின்சாரத்தை கொள்வனவு செய்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பெரும் இந்த மின்சார கொள்வனவிற்காக 18மில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபை ஏ.எஸ்.எம்பிலிபிட்டிய மின் உற்பத்தி நிலையத்துக்கு வழங்கியுள்ளது. ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் அதே தனியார் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 2016ஆம் ஆண்டு முதல் மீண்டும் மின்சாரத்தை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபையும் மின்சக்தி எரிசக்தி அமைச்சும் முடிவெடுத்தது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின் பின்னர் தான் மின்சார கொள்வனவு செய்யவேண்டுமென்பது மின்சாரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், 2016ஆம் ஆண்டு முதல் மின்சார கொள்வனவு செய்ய இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் அமைச்சரவை அனுமதியுடன் மின்சார கொள்வனவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஒப்பந்த காலம் முடிவடைந்தும் 2016 - 2017ஆம் ஆண்டு எவ்வித அனுமதியும் இல்லாமல் மீண்டும் ஏ.எஸ்எம்பிலிபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய இமிசை முடிவெடுத்தது.  2016ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 76மில்லியன் ஷரூபா மின்சார கொள்வனவுக்காக இமிச முதலிட்டுள்ளது.

குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்க வேண்டுமென்ற கொள்கையும் மாறி ஊழலுக்காக மின்சாரம் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். 2015 -20பில்லியன் லாபம் பெற்ற இலங்கை மின்சார சபை 2016இல் 13பில்லியன்இ 2017இல் 21பில்லியன்இ 2018இல் 50பில்லியன், 2019இல் 80மில்லியன் என நட்டமடைந்துவருகிறது.

ஏ.எஸ் எம்பிலிபிட்டியவில் மின்சார கொள்வனவு செய்ததில் 32பில்லியன்இ துருக்கி கப்பல் மூலம் மின்சார கொள்வனவு செய்ய 15பில்லியன்இ இமிச பொறியியலாளர்களுக்கு விசேட சம்பளம் வழங்கியதால் 6பில்லியன்இ என பல காரணங்களினால் தான் 82பில்லியன் ஷரூபா நாட்டம் ஏற்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபை மேற்கொள்ளும் இத்தைகைய ஊழல் மோசடிகள் தொடர்பாக மின்சாரத்தை பயன்பபடுத்துவோர்

சங்கம்  என்ற அடிப்படையில் நிதி குற்றவியல் புலனாய்வு திணைக்களத்துக்கு கடந்த மாதம் 13ஆம் திகதி முறைப்பாடு ஒன்றை தெரிவித்தோம். அதுதொடர்பாக 4மணி நேர வாக்குமூலத்தையும் நாம் வழங்கியுள்ளோம்.

அவசரகால மின்சாரக் கொள்வனவு மட்டுமின்றி இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளின் இன்னும் பல செயல்பாடுகள் காரணமாக குறித்த இலங்கை மின்சார சபை நட்டத்தை எதிர்கொள்கிறது. இந்த நட்டத்தை மக்கள் தான் செலுத்த வேண்டும் என்றார்.

Sat, 06/15/2019 - 10:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை