அதிவேகத்தில் 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 2-வது வீரர் - ஹசிம் அம்லா சாதனை

அதிவேகத்தில் 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை தென் ஆபிரிக்காவின் ஹசிம் அம்லா படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆபிரிக்க தொடக்க வீரர் ஹசிம் அம்லா 55 ஓட்டங்கள் எடுத்தார்.

24-வது ஓட்டங்களை தொட்ட போது அவர் ஒரு நாள் போட்டியில் 8 ஆயிரம் ஓட்டங்களை எடுத்தார். 36 வயதான அம்லா 176 இன்னிங்சில் இந்த ஓட்டங்களை கடந்தார். இதன் மூலம் அதிவேகத்தில் 8 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்திய அணி தலைவர் விராட்கோலி 175 இன்னிங்சில் இந்த ஓட்டங்களை எடுத்து சாதித்து இருந்தார். டிவில்லியர்ஸ் (தென் ஆபிரிக்கா) 182 இன்னிங்சிலும் கங்குலி, ரோகித் சர்மா (இந்தியா) தலா 200 இன்னிங்சிலும், 8 ஆயிரம் ஓட்டங்களை தொட்டு இருந்தனர். ஹசிம் அம்லா 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம், 5 ஆயிரம், 6 ஆயிரம் மற்றும் 7 ஆயிரம் ஓட்டங்களை அதிவேகத்தில் கடந்தவர் என்ற சாதனையில் உள்ளார். விராட்கோலி 8 ஆயிரம், 9 ஆயிரம், 10 ஆயிரம், 11 ஆயிரம் ஓட்டங்களை அதிவேகத்தில் கடந்தவர் என்ற சாதனையில் இருக்கிறார்.

8 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த 4-வது தென் ஆபிரிக்க வீரர் என்ற பெருமையை அம்லா பெற்றார். கலிஸ், டிவில்லியர்ஸ், கிப்ஸ் ஆகியோருக்கு அடுத்தப்படியாக அம்ரா உள்ளார்.

Fri, 06/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை