பலாலி விமான நிலைய புனரமைப்பு பணிகள் 5 ஆம் திகதி ஆரம்பம்

'பொதுமக்கள் காணிகள் சுவீகரிக்கப்படமாட்டாது'

பலாலி விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இவ்விமான நிலையத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்காக பொது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படமாட்டாதென போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் சிவில் விமான சேவைகள் அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் நிதியுதவியுடன் இந்த விமான நிலையம் புனரமைக்கப்பட்டு விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் இரண்டு மாதங்களில் இந்த புனரமைப்புப் பணிகள் நிறைவு பெறவுள்ளதாகவும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர். 

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்காக பொது மக்களின் காணி சுவீகரிக்கப்படமாட்டாது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அது தொடர்பான பேச்சுவார்த்தையில் அதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத் 

Sat, 06/29/2019 - 08:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை