50 ஓவர் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில்

ஐசிசி நடத்தும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் 2021-ம் ஆண்டு ஜனவரி 30-ம் திகதி முதல் பெப்ரவரி 20-ம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்களை நடத்துவதுபோல் மகளிர்களுக்கான உலகக் கிண்ண தொடர்களையும் நடத்தி வருகிறது. தற்போது இங்கிலாந்தில் ஆண்களுக்கான 50 ஓவர் உலகக் கிண்ண் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

2021-ம் ஆண்டு 50 ஓவர் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் ஜனவரி மாதம் 30-ம் திகதி முதல் பெப்ரவரி 20-ம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து 1992 மற்றும் 2015-ல் அவுஸ்திரேலியாவுடன் இணைந்து ஆண்களுக்கான உலகக் கிண்ணத்தை நடத்தியுள்ளது. 2000-ம் ஆண்டில் பெண்களுக்கான உலகக் கிண்ணத்தை நடத்தியுள்ளது.

Thu, 06/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை