கடந்த 5 மாதங்களில் டெங்கு நோயினால் 18,760 பேர் பாதிப்பு

இந்த வருடத்தின் ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளதோடு, 18,760 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தொற்று நோயியல் பிரிவுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 4,066 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்த படியாக கம்பஹா மாவட்டம் உள்ளதோடு, இம்மாவட்டத்தில் 2,480 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றுக்கும் அடுத்த படியாக டெங்கு யாழ்ப்பாண மாவட்டம் காணப்படுவதோடு, இம்மாவட்டத்தில் 1,887 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அத்தகவல்கள் தெரிவித்துள்ளன. 

Fri, 06/07/2019 - 10:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை