நாலந்த கல்லூரியில் இருந்து ஒப்சேர்வர் விருதுக்கு தெரிவான 4வது வீரர் ஜிஹான்

நாலந்தா கல்லூரி கல்வித்துறையில் மட்டுமின்றி விளையாட்டுத்துறையிலும் முன்னணி வகிக்கும் ஒரு பாடசாலையாகும். குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் நாலந்தா கல்லூரி பல திறமைவாய்ந்த வீரர்களை நாட்டுக்கு தந்திருக்கிறது.

ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரருக்கான விருது வழங்கலில் நாலாந்தா கல்லூரிக்காக முதலாவது விருதை வென்று கொடுத்தவர் ரொஷான் மகாநாம ஆவார். இலங்கைக்காக விளையாடிய பெருமை சேர்த்த இவர் பின்னர் சர்வதேச கிரிக்கெட் சபையின் போட்டி தீர்ப்பாளராக கிரிக்கெட்டுக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.

1983 மற்றும் 1984 ஆகிய இரு வருடங்களிலும் ரொஷான் மகாநாம ஒப்ஷேர்வர் சிறந்த பாடசாலை வீரருக்கான விருதை தொடர்ந்து இரண்டு தடவைகள் வென்றார். அதனையடுத்து 1985 இல் மற்றுமொரு நாலந்த வீரரான அசங்க குருசிங்க இந்த விருதை வென்றார்.

அதற்கு நான்கு வருடங்களின் பின் 1989 இல் அந்த விருதை வெல்லும் வாய்ப்பு மற்றொரு நாலந்த கல்லூரி வீரரான குமார தர்மசேனவுக்கு கிடைத்தது. இந்த மூன்று நாலந்தா கல்லூரி கிரிக்கெட் வீரர்களும் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து இலங்கைக்காக கிரிக்கெட் துறை புகழ் பெற்றனர். இந்நிலையில் சில காலத்துக்கு நாலந்தா கல்லூரி வீரர் எவரும் இந்த விருதை வெல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனினும் 2006 இல் மீண்டும் ஒரு நாலந்தா கல்லூரி வீரருக்கு அந்த அதிர்ஷ்டம் கிஹான் ரூபசிங்க மூலம் வந்தது.

ரூபசிங்க 1986 மார்ச் 5ஆம்திகதி வது பிடிவலயில் பிறந்தார்.

நாலந்தா கல்லூரியில் இருந்து விலகியதும் இவர் உள்ளூர் கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் விளையாடினார். நடு வரிசையில் களமிறங்கும் ஒரு அதிரடி ஆட்டக்காரராக விளையாடிய இவர் தமிழ் யூனியன் கழகத்தில் 2008/09 ஆம் பருவ காலத்தில் இரண்டாவது அதிகப்படி ஓட்டங்களைப் பெற்றவர் அந்த பருவ காலத்தில் அவர் 52,50 என்ற சராசரியில் மொத்தம் 945 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

அதன் மூலம் இவர் இலங்கை ஏ அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இலங்கை ஏ அணி பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக விளையாடிய அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் இவர் இரண்டு அரைச் சதங்களைப் பெற்றார்.

அதனையடுத்து இலங்கையின் ரி /20 அணியில் இடம்பிடித்த இவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.

திலின கண்டம்பியின் தலைமையில் தென்னாபிரிக்கிாவுக்கு விஜயம் செய்த இலங்கை ஏ அணியில் ரூபசிங்கவும் இடம்பெற்றார். இந்த அணியில் ரங்கன ஹேரத், மாலிங்க பண்டார, தில்ருவன் பெரேரா, தம்மிக்க பிரசாத் சுஜீவ டி சில்வா சானக்க வெலகெதர மற்றும் இஷார சமரசிங்க ஆகிய அனுபவமுள்ள வீரர்களும் இடம்பிடித்திருந்தனர். இந்த அணியில் சுரங்க லக்மால், இடது கை சுழல்பந்து வீச்சாளராக கிஹான் ரூபசிங்க அஞ்சலோ மத்திவ்ஸ், தரங்க பரணவிதான ஆகிய இளம் வீரர்களும் இடம்பெற்றனர். 2006ஆம் ஆண்டு ஒப்சேவர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை வென்றதுடன் ரூபசிங்க அதே வருடம் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராகவும் தெரிவானார். 2006 ஆம் வருடம் நாலந்த கல்லூரியின் சிரேஷ்ட கிரிக்கெட் அணிக்கு அவர் தலைமை தாங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் 2002ம் ஆண்டு இடம்பெற்ற ஆசிய பாடசாலைகள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ரூபசிங்க இலங்கை பாடசாலைகளின் 17வயதுக்குட்பட்டவர்களுகான அணியில் விளையாடினார். அதையடுத்து 2005இல் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணியிலும் ரூபசிங்க இடம்பிடித்தார்.

2004 இல் நடைபெற்ற இளைஞர் உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் விளையாடிய 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இலங்கை அணியிலும் ருபசிங்க விளையாடினார்.

இலங்கைக்காக ரி/20 போட்டியில் சர்வதேச ரீதியில் விளையாடிய 30 ஆவது வீரராக ரூபசிங்க கருதப்படுகிறார். இவர் 2009 செப்டம்பர் 2ஆம்திகதி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கைக்காக ரி.20 அறிமுகத்தை பெற்றார்.

97 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ரூபசிங்க மொத்தம் 4908 ஓட்டங்களைப் பெற்றார். இதில் 36 சதமும் 30 அரைச்சதங்களும் உள்ளடங்குகின்றன.

ஒப்சேர்வர்- சிறந்த பாடசாலை கிரி்ககெட் வீரர் விருதை வென்ற ஒவ்வொருவரும் ஆரம்பம் முதலே இலங்கை அணிக்காக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அது டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி./20 போடடிகளாக இருந்தாலும் அவர்கள் வழங்கிய பங்களிப்பு இன்றியமையாதது. இப்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடும் வீரர்களிலும் ஒப்சேர்வர் விருது வென்ற வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் காப்பாளரும் அதிரடி துடுப்பாட்ட வீரருமான குசால் மெண்டிஸ் தற்போது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் ஆறு வருடங்களுக்கு முன்னர் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரருக்கான விருதை வென்றவர். அவர் மொறட்டுவை பிரின்ஸ் ஒப்வேல்ஸ் பாடசாலைக்காக விளையாடிய போதே ஒப்சேர்வர் விருதை வென்றார். அவர் தனது பாடசாலை காலத்தில் இருந்த இலங்கை அணிக்கு தனது பங்களிப்பை வழங்கி வந்தவர் ஆவார்.

இலங்கை தேசிய அணியில் டெஸ்ட் அறிமுகம் பெறுவதற்கு முன் அவர் வெறுமனே 16 முதல்தர போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார்.

அவரது 20 ஆவது வயதில் டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம் பெற்ற குசல் மெண்டிஸ் முதலாவது டெஸ்ட் சதத்தை பெறுமுன்னர் முதல்தர கிரிக்கெட்டில் ஒரேயொரு சதத்தை மட்டுமே பூர்த்தி செய்திருந்தார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பல்லேகலயில் அவர் பெற்ற 176 ஓட்டங்களே அவரது முதலாவது டெஸ்ட் சதமாக அமைந்தது. இந்நிலையில் 41வது ஒப்சேர்வர் – மொபிடெல் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கல் விழா இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ளது.

ஒக்சேர்வர்- - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை வெல்வது ஒவ்வொரு பாடசலை கிரிக்கெட் வீரரினதும் இலட்சியமாகும். இந்த பெருமைமிகு விருது இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் அவர்களது கனவை நனவாக்கும் முதல் படியாகும். இலங்கை அணியில் இப்போது உள்ள வீரர்களில் மூன்றுபேர் மேற்படி ஒப்சேர்வர்- மொபிடெல் விருதை வென்றவர்கள் ஆவர். தினேஷ் சந்திமால் (2009) நிரோஷன் திக்வெல்ல (2012) குசல் மெண்டிஸ் (2013) ஆகியோரே அந்த மூன்று வீரர்கள் ஆவர்.

Sat, 06/15/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக