நைஜீரியாவில் 3 தற்கொலை தாக்குதல்களில் 30 பேர் பலி

வடகிழக்கு நைஜீரியாவில் இடம்பெற்ற மூன்று தற்கொலைத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜிஹாத் குழுவான பொக்கோ ஹராம் ஆதிக்கம் செலுத்தும் பகுதியிலேயே கடந்த ஞாயிறன்று இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மாநிலத் தலைநகர் போர்னோவில் இருந்து 38 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் கொன்டுகாவில் உள்ள மண்டபம் ஒன்றுக்கு வெளியிலேயே மூன்று தற்கொலைதாரிகளும் தமது குண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இந்த பண்டபத்தில் கால்பந்து ரசிகர்கள் தொலைக்காட்சியில் கால்பந்துப் போட்டியை பார்வையிட்டிருந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாக அவசர முகாமை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் அந்த மண்டபத்திற்குள் ஒரு குண்டுதாரி நுழைவதை அதன் உரிமையாளர் தடுத்துள்ளார். இதன்போது குண்டுதாரிக்கும் கட்டுப்பாட்டாளருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்்ட நிலையில் குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

மற்றைய இரு தற்கொலைதாரிகளும் அருகில் இருக்கும் தேநீர் விடுதியில் கூட்டத்துடன் கலந்து குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எவரும் உடன் பொறுப்பேற்காதபோதும் இது பொக்கோ ஹராம் பாணியில் இருப்பதாக அதிகாரிகள் நம்புகின்றனர். வடகிழக்கு நைஜீரியாவில் கடும்போக்கு இஸ்லாமிய அரசொன்ற நிறுவுவதற்காக போராடுவதாகக் கூறி அந்த அமைப்பு வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறது.

பொகோ ஹராம் வன்முறைகளில் இதுவரை 27,000 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதோடு இரண்டு மில்லியன் பேர் வரை தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Tue, 06/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை