வியட்நாமில் 2.8 மில்லியன் பன்றிகள் கொல்லப்பட்டன

வியட்நாமில் பன்றிக் காய்ச்சல் தொற்று காரணமாக, 2.8 மில்லியன் பன்றிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த எண்ணிக்கை, வியட்நாமில் உள்ள மொத்தப் பன்றிகளில் 10 வீதமாகும். அதனால் தற்போது அந்நாட்டுப் பன்றிப் பண்ணைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் பன்றிக் காய்ச்சல் தொற்று சிறிய அளவில், வீடுகளில் இருந்த பண்ணைகளில் ஆரம்பித்ததுடன் தற்போது அது நகரின் முக்கியப் பண்ணைகளில் பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியட்நாமில் உள்ள 63 மாநிலங்களில் 60 மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. வியட்நாமின் தென் பகுதிகளில் தற்போது அதிக மழை பெய்து வருவதால் கிருமிப் பரவலைக் கட்டுபடுத்துவது கடினமாகி வருகிறது.

பன்றிக் காய்ச்சல் கிருமிகளால் மனிதர்களுக்கு ஆபத்தில்லை.

Thu, 06/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை