ஒலிம்பிக் தின நிகழ்வுகள் 25ம் திகதி மாத்தறையில்

தேசிய ஒலிம்பிக் சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஒலிம்பிக் தின நிகழ்வுகள் எதிர்வரும் 25ம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது.

பொல்ஹேன கடற்கரையிலிருந்து உயன்வத்த விளையாட்டு மைதானம் வரையிலான பாடசாலை மாணவர்கள் பங்குபற்றும் ஒலிம்பிக் ஓட்டப்போட்டி, வலயமட்டத்தில் 50 மாணவர்கள் பங்குகொள்ளும் ஒலிம்பிக்கின் மதிப்பு என்றும் தொனிப் பொருளில் சித்திரப் போட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இத்தினம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இம்முறை ஒலிம்பிக் தின கொண்டாட்டங்களின் விசேட அம்சம் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக பல விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி பாடசாலை மாணவர்களின் உதவியுடன் பொல்ஹேன கடற்கரையை சுத்தம் செய்தலும் மற்றும் அழிந்துவரும் முருகைக்கற்களை பாதுகாப்பதற்காக நிலையான திட்டமொன்றை மேற்கொள்ளல், மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து முருகைக்கற்கள் பாதுகாக்கும் தொடர் திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதோடு முருகைக்கற்கள் பாதுகாப்பு மற்று கடல் உயிரினங்கள் தொடர்பான மையமொன்றை ஆரம்பிக்கவும் தேசிய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக கடற்படையினர் உள்ளிட்ட பல அமைப்புக்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைத்துள்ளது என தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளர் மெக்ஸ்வெல் த சில்வா கூறினார்.

ஒலிம்பிக் தின நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க இணைந்துகொள்வதோடு ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திக்க, ஜயசிங்க தான் வென்ற ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்துடன் பங்குபற்றவுள்ளார். மாத்தறை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு சுசந்திகா ஜயசிங்க பெற்ற வெள்ளி ஒலிம்பிக் பதக்கத்தை காண சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இது தொடர்பாக ஒலிம்பிக் இல்லத்தில் அண்மையில் ஊடக சந்திப்பொன்று நடைபெற்றதோடு சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் மற்றும் பொருளாளர் சேனக ரணசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Tue, 06/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை