கடந்த 250 ஆண்டுகளுக்குள் 600 தாவர இனங்கள் அழிவு

கடந்த 250 ஆண்டுகளில் காடுகளில் இருந்து சுமார் 600 தாவர இனங்கள் அழிந்திருப்பதாக விரிவான ஆய்வு ஒன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு ஒன்றில்லாமல் உண்மையாக அழிவுக்கு உள்ளான இனங்களே இதன்போது கண்டறியப்பட்டிருப்பதோடு இது அனைத்து பறவை, விலங்குகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் அழிவடைவதை விடவும் இரட்டிப்பு எண்ணிக்கையாகும்.

இயற்கையாக எதிர்பார்க்கப்பட்டதை விடவும் 500 மடங்கு வேகமாக தவரங்கள் அழிவடைந்து வருதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு மில்லியன் விலங்குகள் மற்றும் தாவர இனங்கள் அழிவடையும் ஆபத்து இருப்பதாக கடந்த மே மாதம் வெளியான ஐ.நா அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

கீவில் உள்ள ரோயல் தவரவியல் பூங்கா மற்றும் ஸ்டொக்ஹோம் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் சிலிக்கான் குரோக்கஸ் போன்ற அழிவடைந்ததாக நம்பப்பட்ட சில தாவர இனங்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆதாராம் கிடைத்திருப்பது இதன் சாதகமான அம்சமாகும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நாம் சுவாசிக்கும் ஒட்சிசன் மற்றும் உண்ணும் உணவுகளை தரும் தாவரங்களில் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் தங்கியுள்ளன.

Wed, 06/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை