கல்வித்துறையின் வளர்ச்சிக்கு 20 ஆயிரம் நியமனங்கள்

நாட்டின் கல்வித்துறையின் வளர்ச்சிக்காக மேலதிகமாக 20ஆயிரம் நியமனங்களை விரைவில் வழங்கவுள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

கல்வித்துறையை நவீன யுகத்துக்குள் முன்னேற்றத்துடன் அழைத்துச் செல்லும் கல்வித்துறையே தேவையாக உள்ளது. அதற்காக ஆசிரியர்களும் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். 

திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் (27) மாலை நடைபெற்ற நீண்ட காலம் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றியவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.   தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,  இந்த மாகாணத்திலுள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இன்னும் ஆசிரியர்கள் பலரை ஒவ்வொரு பாடசாலைகளின் மேம்பாட்டுக்காகவும் நியமிக்க விருக்கிறோம்.கல்வி அமைச்சின் செயலாளருடன் இது தொடர்பில் பேசியிருக்கிறேன். பிள்ளைகளின் வளரச்சிக்காகவே இது, வேறு எந்த நோக்கத்திற்காகவும் இல்லை. இன்னமும் 20ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ளவிருக்கிறோம்.  

அபிவிருத்தியுடன் இணைந்ததாக கல்வியும் மேம்படுத்தப்படுவது முக்கியமானது, அதுவே சிறந்தது. கல்வித்துறையை நவீனத்துவத்துடன் வளர்ச்சியடையச் செய்வதே எமது நோக்கம். கணனித்துறையுடன் இணைத்து முன்னேற வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறைக்குள் ஆசிரியத்துறையினையும் இணைத்துக் கொள்ளவேண்டும். அதன் வளர்ச்சியுடன் நாம் நம்முடைய கல்வித்துறையினை முன்னேற்றிக் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

ரொட்டவெவ குறூப் நிருபர்  

Sat, 06/29/2019 - 09:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை