கொங்கோவில் 2,008 பேர் எபோலாவால் பாதிப்பு

மத்திய ஆபிரிக்க நாடான ​ெகாங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000-ஐத் தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் ஏற்பட்ட எபோலா நோய் பரவலில், இதுவரை 2,008 பேருக்கு அந்த நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களில் 1,914 பேருக்கு எபோலா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2014, 16-ஆம் ஆண்டுகளில், எபோலா உயிர்க் கொல்லி நோயால் 11,300 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு தற்போதுதான் அந்த நோயின் பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள சூழல் மிகவும் அபாயகரமானது என்றும், இதுதொடர்பாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Thu, 06/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை