சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ஓட்டங்களை கடந்து கோலி சாதனை

இந்திய அணி தலைவர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20 ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - மேற்கிந்தியதீவு அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 34-வது ‘லீக்‘ ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்திய அணி தலைவர் விராட் கோலி இந்த போட்டிக்கு முன் 416 இன்னிங்சில் 19963 சர்வதேச ஓட்டங்கள் குவித்திருந்தார்.

37 ஓட்டங்கள் பெற்றால் விரைவாக 20 ஆயிரம் ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை பதிவு செய்யலாம் என்ற நோக்கத்துடன் இப் போட்டியில் களம் இறங்கினார்.

அவர் ஹோல்டர் வீசிய 25-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ஓட்டம் எடுத்தபோது 37 ஓட்டங்கள் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் விரைவாக 20 ஆயிரம் ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விராட் கோலி டெஸ்டில் 6613 ஓட்டங்களும் (131), 20 ஓவர் போட்டியில் 2263 ஓட்டங்களும் (62) எடுத்துள்ளார்.

20 ஆயிரம் ஓட்டங்களை விராட் கோலி 417-வது இன்னிங்சில் கடந்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், லாரா 453 இன்னிங்சில் 20 ஆயிரம் ஓட்டங்களை கடந்ததே சாதனையாக இருந்தது.

அதை தற்போது விராட் கோலி முறியடித்துள்ளார். ரிக்கி பொண்டிங் 468 இன்னிங்ஸ் 20 ஆயிரம் ஓட்டங்களை தொட்டு இருந்தார்.

இந்த ஓட்டங்களை எடுத்த 3-வது இந்தியர், சர்வதேச அளவில் 12-வது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை கோலி பெறுவார்.

டெண்டுல்கர் சர்வதேச போட்டிகள் அனைத்திலும் சேர்ந்து 34,357 ஓட்டங்கள் எடுத்து (782 இன்னிங்ஸ்) முதல் இடத்தில் உள்ளார்.

ராகுல் டிராவிட் 24,208 ஓட்டங்களுடன் (509 இன்னிங்ஸ்) 6-வது இடத்தில் உள்ளார்.

இவர்கள் வரிசையில் கோலியும் இணைந்துள்ளார். சங்கக்கார (28,016 ஓட்டங்கள்) 2-வது இடத்திலும், பொண்டிங் (27,483) 3-வது இடத்திலும் உள்ளனர்.

Sat, 06/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை