14 துறைகளில் ஜப்பானில் தொழில்

ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து

ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுக்கும் வரலாற்று முக்கியமான ஒப்பந்தம் நேற்று (18) கைச்சாத்திடப்பட்டது. ஜப்பான் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசு சார்பில் அமைச்சர் ஹரீன் பெர்னாந்தும்

ஜப்பான் சார்பில் அந் நாட்டு தொழில் அமைச்சரும் ஜப்பானில் வைத்து கைச்சாத்திட்டதாக வெ ளிநாட்டு வேலைவாய்ப்பு மேற்பார்வை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்த ஒப்பந்தத்தின் கீழ் எதிர்வரும் 10 வருட காலத்திற்கு எந்த வித வரையறையுமின்றி இலங்கையருக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 9 நாடுகளுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு 7 ஆவது நாடாக இலங்கைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இலங்கை அரசுக்கு கிடைத்த பாரிய வெற்றி எனவும் அவர் கூறினார்.

முதியோரை பராமரித்தல்,கட்டிட சுத்திகரிப்பு,முகாமைத்துவ துறை,இயந்திர துறை,கைத்தொழில் துறை, இயந்திர உதிரிப்பாக துறை,மின்சாரத்துறை,நிர்மாணத்துறை,கப்பற்துறை,போக்குவரத்து பராமரிப்பு துறை,விமானச் சேவை துறை,ஹோட்டல்,விவசாயம், மீன்பிடி, உணவு உற்பத்தித் , உணவு கைத்தொழில் போன்ற 14 துறைகளில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இதற்கான பயிற்சி நெறிகள் வெ ளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினூடாக தயாரிக்கப்பட்டுள்ளதோடு பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அதிக சம்பளத்திற்கு அனுப்புவதே அமைச்சின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையரின் தொழிற்கல்வி துறை ஜப்பானின் மட்டத்திற்கு உயரவும் அதனூடாக தொழில் நுட்ப முன்னேற்றத்தை அடையவும் இலங்கையருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக பொய்ப்பிரசாரம் செய்து ஏமாற்றுவோரிடம் பணத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் அவர் கோரியுள்ளார்.

Wed, 06/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை