14 ஐ.எஸ் அகதிச் சிறுவர்கள் பிரான்ஸ், நெதர்லாந்தினால் ஏற்பு

ஜிஹாதிக் குடும்பங்களில் பிறந்த 14 அகதிச் சிறுவர்களை சிரியாவின் குர்திஷ் நிர்வாகம், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்திடம் கையளித்துள்ளது. அதிகம் பேர் தங்கிவரும் முகாம்களில் இருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்றும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 12 பிரான்ஸ் மற்றும் இரண்டு நெதர்லாந்து அகதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டதாக குர்திஷ் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. அதிகபட்சம் 10 வயது கொண்ட சிறுவர்களும் இதில் உள்ளனர்.

சிரியாவில் உள்ள முகாம்களில் பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு ஜிஹாதிக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நிர்க்கதியாகியுள்ளனர்.

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என்று அழைத்துக் கொள்ளும் குழுவுக்கு எதிரான அண்மைய மோதலின்போது தப்பி வந்தவர்கள் இவ்வாறு முகாம்களில் உள்ளனர்.

குர்திஷ் பிராந்தியத்தில் இருக்கும் பிரதான முகாமான அல் ஹோலில் குறைந்த 40 நாடுகளைச் சேர்ந்த 70,000க்கும் அதிகமானவர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்தவர்களாவர்.

இந்தப் பிரச்சினை குறித்து வெளிநாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று குர்திஷ் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

Tue, 06/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை