இன்று 12 மணிக்குள் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பேன்

தரமுயர்த்துவதை எதிர்க்க எவருக்கும் உரிமையில்லை

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதை எதிர்க்க எவருக்கும் உரிமை கிடையாது. இது தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையிலான பிரச்சினையல்ல. நிர்வாக அலகு தொடர்பான பிரச்சினை.

இந்த நியாயமான கோரிக்கை நிவர்த்திக்கப்படவேண்டும். இன்று மதியம் 12 மணிக்குள் கல்முனையில் நடத்தப்படும் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நான் அர்ப்பணிப்புடன் தலையிடுவேன் என்றும் வண. அத்துரலிய ரத்தனதேரர் நேற்று தெரிவித்தார்.

கல்முனை நகர சபையில் தமிழ் –முஸ்லிம் பிரதிநிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை தரமுயர்த்தப்படுவதற்கு பலத்த எதிர்ப்பை வெளியிட்டும் அதனை ஆதரித்தும் இரு தரப்பும் பெரும் வாதத்தில் ஈடுபட்டன எனத் தெரிவித்த ரத்தன தேரர், புலிகளின் காலத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக முஸ்லிம் தரப்பு தெரிவித்ததாகவும் கூறினார்.

எவ்வாறெனினும் கடந்த கால விடயங்கள் எல்லாவற்றையும் ஒருபறம் தள்ளிவிட்டு தற்போதைய நிலை தொடர்பாக தீர்மானம் எடுக்கவேண்டிய தேவை குறித்தும் தான் இரு தரப்புக்கும் விரிவாக தெரிவித்ததுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் கட்டாயம் தரம் உயர்த்தப்படவேண்டியதன் தேவை குறித்து தெளிவு படுத்தியதாகவும் தெரிவித்தார்.

கல்முனையில் நடைபெறுகின்ற இந்தப் போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் என்பதை ஏற்றுக்கொண்ட ரத்தன தேரர், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் நடவடிக்கையை தான் முன்னின்று தீர்வைப் பெற்றுதருவேன் என்றும் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு விடயத்தில் எல்லை நிர்ணயம் தொடர்பான பேச்சுக்கள் நேற்றைய இருதரப்பு சந்திப்பின் போது பேசப்பட்டதாக தெரிவித்த ரத்தன தேரர், எல்லை நிர்ணய நடவடிக்கை உடனடியாக செய்யக்கூடிய விடயம், இதனை ஒரு பிரச்சினையாக் கொண்டு தொடர்ந்தும் இவ்விடயத்தில் இழுத்தடிப்பு செய்ய முடியாது என்பதை தான் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எல்லை நிர்ணயம், பிரதேச செயலக தரமுயர்வு என்பன உடனடியாக இரண்டொரு தினங்களில் நிறைவு செய்யக்கூடிய விடயமல்ல. எனவே இப்போது கல்முனையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது இந் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என ரத்தன தேரரிடம் கேட்டபோது,

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நேரடியாக சென்று பார்வையிட்டேன். இன்று மதியம் 12 மணிக்குள் அவர்களது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்றும் தேரர் தெரிவித்தார்.

இதே வேளை பிரதேச செயலகத்தின் முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் (20) நேரில் பார்வையிட்டு விட்டு அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில், அத்துரலிய ரத்ன தேரர் மேலும் தெரிவிக்கையில்...

கல்முனை வடக்குப் பிரதேசத்திலே ​ெபரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்காமல் இந்த மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுக்க கொண்டிருக்கின்றது. இந்த பிரதேச செயலகத்தை 2014 ஆம் ஆண்டு அனைத்து அதிகாரங்களுடனும் அந்த மக்களுக்குச் சேவை செய்ய வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வழங்கப்பட்டுள்ள போதிலும் அந்த அதிகாரத்தை தடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்குத் தடையாக இருப்பவர்கள் இப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள். இந்த விடையம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அதிகாரம் இருக்கின்றது மாவட்ட அரசாங்க அதிபருக்கு. அவர்தான் அரசாங்கத்திற்கு இவ்விடையத்தை எடுத்துரைக்கும் அதிகாரியாக உள்ளார்.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா காணி வழங்குகின்றபோது தமிழ் மக்களுக்குச் செய்திருக்கின்ற அநீதி தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து பாரத்திருக்கின்றோம். இப்பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு காணி வழங்கியமை தொடர்பில் ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால், எதிர்வருகின்ற 3 மாத காலத்திற்குள் நாங்கள் உருவாக்குகின்ற அரசாங்கததினால், அனைத்து பிரச்சினைகளையும் விசாரிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றோம். மட்டக்களப்பு பல்கலைக் கழகம் என்ற ரீதியில் பின்னர் ஷரீஆ பல்கலைக் கழகம் என மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் 3 மாத காலத்திற்குள் எமது ஆட்சியை கொண்டு வந்து ஷரீஆ பல்கலைக் கழக காணியை விடுவித்து, அதிலே பாதுகாப்புப் பல்கலைக் கழகத்தை உருவாக்கவுள்ளோம்.

எதிர்காலத்தில் மூவின மக்களும் ஒன்று சேர்ந்து வாழக்கூடிய தழிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என வேறுபடுத்தி காணிகளை வழங்காமல் ஒரே இடத்தில் காணிகளை ஒற்றுமையுடன வாழ காணிகளை வழங்க எதிர்பார்க்கின்றோம். இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அடிப்படை வாதிகள், தீவிரவாதிகள் அனைத்தையும் முற்றுமுழுதாக இந்நாட்டிலிருந்து ஒழிப்போம். மட்டக்களப்பு மாவ்டத்தில் 75 வீதமான தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள்.

எனவே அங்குள் 75 வீதமான தமிழ் மக்களுக்கும் 3 நாடாளுமன்றப் பிரதிநிதிகள், 25 வீதமான முஸ்லிம் மக்களுக்கு 2 அமைச்சர்களும் ஒருவர் முன்னாள் ஆளுனராகவும் உள்ளார். இலங்கையில 75 வீத மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கினாறர்கள், இலங்கையில் முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களும், சிங்கள மக்களும் ஒன்றிணைந்தால் 90 வீதமாகிவிடுவோம். நாங்கள் 90 வீதமானவர்களும் ஒன்றிணைந்து எமக்குத் தேவையான அனைத்தையும் ஒன்றிணைந்து செய்வோம்.

தமிழர்களும், சிங்களவர்களும், இந்த நாட்டிலே ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற சமூகமாகும். பௌத்தர்களினதும், இந்துக்களினதும் ஒரே ரீதியான கலாசாரமாகும், எங்களது பௌத்த விகாரைகளில் பிள்ளையார், முருகன், சரஸ்வதி, பேன்ற பல இந்துக் கடவுள்களை வைத்து வணங்கி வருகின்றோம். இந்நிலையில் தமிழர்களையும், சிங்களவர்களையும் பிரிப்பதற்கு அரசியல்வாதிகள் முற்படுகின்றனர். தமிழ் தேசியக் கூட்மைப்பையும், எம்மையும் பிரிப்பதற்கு நாங்கள எந்த விதத்திலும் இடமளிக்கப் போவதில்லை. என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துக் கொள்கின்றேன். அனைவருக்கும் அல்லாஹ் தான் பெரியவன் என்கிறார்கள், ஆனால் முருகனும் புத்தரும்தான் அனைவருக்கும் பெரியவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். முருகனும், புத்தரும் ஒரே இடத்தில் இருக்க முடியுமாக இருந்தால் ஏன் மனிதர்களாகிய நாமும் ஒரே இடத்தில் இருக்க முடியாது.

முஸ்லிங்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல நாங்கள் முஸ்லிங்களின் தீவிரவாதத்தைதான் எதிர்க்கின்றோம். எனவே தமிழர்களும். சிங்களவர்களுமாக நாங்கள் 90 வீதம் இருக்கின்றோம் எனவே தீவிரவாதம் இல்லாத முஸ்லிங்கள் அனைவரும் எம்முடன் வந்து இணைந்து கொள்ளுங்கள். அவ்வாறு இணைந்து கொண்டால் உங்களுடைய வியாபாரமும் சிறப்பாக அமையும். நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்களல்ல ஆனால் எதிர்காலத்தில் இந்த நாட்டிலே சிங்கள தமிழ் கலவரம் ஒன்று இடம்பெறாது என்பதை உறுத்தியாக கூறுகின்றேன்.

எனவே இன்று நடைபெறுகின்ற இந்தப்போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் என்பதை எங்களுக்கு விளங்குகின்றது. இதற்குரிய தீர்வை 24 மணித்தியாலத்திற்குள் தீர்வுப் பெற்றுதருவேன் என அவர் தெரிவித்தார்.

பெரியபோரதீவு தினகரன் நிருபர்

Fri, 06/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை