பயணி கட்டுப்படுத்த முயன்றபோது பஸ் விபத்து: 12 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் பயணி ஒருவர் பஸ் வண்டியின் ஸ்டீயரிங் வீல் கருவியை அபகரிக்க முயன்றதால் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

பயணி ஒருவர் ஓட்டுநரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் வாகன நிறுத்தம் ஒன்றில் வைத்து பஸ் வண்டியை கட்டுப்படுத்த அந்தப் பயணி முயற்சித்ததாகவும் பார்த்தவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பஸ் வண்டி இரு கார்களுடன் மோதி இருப்பதோடு இதன் காரணமாக லொரி ஒன்றும் கவிழ்ந்துள்ளது. இதில் பஸ் வண்டியில் ஓட்டுநர் உயிரிழந்திருப்பதோடு பஸ் வண்டியை கட்டுப்படுத்த முயன்ற பயணி காயமடைந்துள்ளார்.

“பயணத்திற்கு இடையில் பயணி ஒருவர் வலுக்கட்டாயமாக ஸ்டீயரிங் வீல் கருவியை அபகரிக்க முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பஸ் கட்டுப்பாட்டை இழந்துள்ளது” என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் மோசமான வீதி விபத்துகள் வழக்கமானதாகும். கடந்த 2018 பெப்ரவரியில் சுற்றுலா பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் மேற்கு ஜாவாவில் 25 பேர் உயிரிழந்தனர்.

Tue, 06/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை