அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 12 பேர் உயிரிழப்பு

அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டிடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டதோடு 7 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிதாரி என்று சந்தேகிக்கும் நபர், விர்ஜீனியா கடற்கரை நகரத்தின் நீண்ட நாள் மற்றும் தற்போதைய ஊழியர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரசு கட்டிடம் ஒன்றில் ‘பாரபட்சம் இன்றி’ அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். துப்பாக்கிதாரியின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. அவர் பொலிஸாரால் கொல்லப்பட்டார்.

காயமடைந்த ஆறு பேரில் ஒருவர் காவல்துறையைச் சேர்ந்தவராவார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் 11 பேர் உள்ளுர் நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் ஒரு ஒப்பந்ததாரராக இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த மாநிலம் மற்றும் நகரில் நடந்த மோசமான சம்பவம் இது என விர்ஜீனியாவின் ஆளுநர் ராப் நார்தம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தகவல்களை கொண்ட வலைதளத்தின்படி, இது அமெரிக்காவில் 2019 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற 150ஆவது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஆகும்.

Mon, 06/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை