மட்டக்களப்பில் CCTV கமெரா விற்பணை நிலையம் தீக்கிரை

மட்டக்களப்பில் CCTV கமெரா விற்பணை நிலையம் தீக்கிரை-Shop Fire-Batticaloa

- பிரதான ஹார்ட் டிஸ்க் மாயம்
- நாசகார செயல் என சந்தேகம்

மட்டக்களப்பில் CCTV கமெராக்கள் விற்;பணை செய்யும் வர்த்தக நிலையமொன்று (27) திங்கட்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள முகம்மட் சபீக் என்பவருக்;கு சொந்தமான வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் இன்று (27) காலை தனது வர்த்தக நிலையத்தினை திறந்த போது வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்துள்ளதை கண்டு மட்டக்களப்பு பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் CCTV கமெரா விற்பணை நிலையம் தீக்கிரை-Shop Fire-Batticaloa

குறித்த இடத்திற்கு வந்த மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ. குமாரசிறி மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம.என்.ஜி. கீத்தா வத்துரு உட்பட பொலிஸ் அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த CCTV கமெராக்கள் மற்றும் அங்கிருந்த இலத்திரணியல் உபகரணங்கள் என்பன முற்றாக எரிந்துள்ளன. முப்பது இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் எரிந்துள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார். அத்துடன் அங்கிருந்த பிரதான ஹார்ட் டிஸ்க்கும் காணாமல் போயுள்ளது.

மட்டக்களப்பில் CCTV கமெரா விற்பணை நிலையம் தீக்கிரை-Shop Fire-Batticaloa

இது நாசகார செயலாக இருக்கலாமெனவும் இந்த வர்த்தக நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டிருக்கலாமெனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)

Mon, 05/27/2019 - 12:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை