வடகொரிய கப்பலை அமெரிக்கா பறிமுதல்

பொருளாதார தடையை மீறி நிலக்கரி ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட வட கொரிய நாட்டுக் கப்பல் அமெரிக்காவின் சமோவா தீவுக்கு கொண்டு செல்லப்பட்டது. வைஸ் ஹானஸ்ட் என்ற அந்தக் கப்பலானது வட கொரியாவின் இரண்டாவது மிகப்பெரிய சரக்குக் கப்பல் ஆகும். கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்தோனேசியா அருகே அந்தக் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது. பொருளாதார தடையை மீறி நிலக்கரிகளை ஏற்றிச் சென்றதாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டியது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில், வைஸ் ஹானஸ்டை அமெரிக்கா பறிமுதல் செய்தது. தற்போது அது, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள சமோவா தீவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்தக் கப்பலை ஏலத்தில் விடவோ அல்லது கடற்படை பயிற்சிக்கு பயன்படுத்தவோ அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை