ஈரானுடன் பதற்றம்: அமெரிக்க போர் தளபாடங்கள் விரைவு

ஈரானுடனான பதற்றத்திற்கு மத்தியில் ஏவுகணை பாதுகாப்பு முறையை அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு அனுப்பியுள்ளது. தளபாடங்கள் மற்றும் விமானங்களை கொண்ட யு.எஸ்.எஸ் ஆர்லிங்டன் போர்க் கப்பலும் ஏற்கனவே நிலைகொண்டுள்ள யு.எஸ்.எஸ் அப்ரஹாம் லிங்கன் விமானதாங்கிக் கப்பலுடன் வளைகுடா பகுதியில் இணையவுள்ளது.

அமெரிக்காவின் பி-52 குண்டு வீசும் விமானமும் கட்டார் விமானதளத்தை அடைந்ததாக பெண்டகன் குறிப்பிட்டுள்ளது. ஈரானினால் பிராந்தியத்தில் அமெரிக்கா முகம்கொடுக்கும் அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

எனினும் இதனை முட்டாள்தனமான ஒன்று என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது. படைகளைக் குவித்து, ஈரானை மனரீதியாக பலவீனப்படுத்தவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஈரானும் யுரேனியத்தை செறிவூட்டப்போவதாக அண்மையில் குறிப்பிட்டிருந்தது.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன், ஈரானுடன் சண்டையிட விருப்பம் இல்லை என்றும், அதே நேரம், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தங்களது படைகளை தற்காத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை