புதிய தலைநகரைத் தேடும் இந்தோனேசிய அரசாங்கம்

இந்தோனேசியாவின் தலைநகரை மற்றோர் இடத்திற்கு மாற்றத் திட்டமிடுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ அறிவித்ததை அடுத்து அவர் களிமந்தான் தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்தத் தீவில் தலைநகரை அமைப்பதற்கு ஏற்ற சில இடங்களை அந்நாட்டின் நகரத்திட்ட அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

தற்போதைய தலைநகர், ஜகார்த்தாவின் இடப்பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், சுற்றுப்புற மாசு, அடிக்கடி ஏற்படும் வெள்ளம் ஆகிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்குள்ள மக்கள் நிலத்தடி நீரை எடுக்க நிலத்தில் ஆழமான பல்வேறு கிணறுகளைத் தோண்டுவதால் அந்நகர் ஆண்டுக்குச் சுமார் 10 சென்டிமீற்றர் நிலத்திற்குள் இறங்கி வருகிறது.

புக்கிட் சுகார்த்தோ, பலங்காராயா ஆகிய இடங்களில் புதிய தலைநகர் அமையலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.

Thu, 05/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை