மட்டு. சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் விஜயம்

குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (03) விஜயம் செய்து, அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். 

சீயோன் தேவாலயமானது, ஈஸ்டர் ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி  குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது.

மிக விரைவில் சீயோன் தேவாலயத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை  எடுப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அத்தோடு, குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்தோடு,  காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமரின் விஜயத்தின்போது அதிகளவான பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தேவாலய  வளாகத்தில்  பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு,  மட்டக்களப்பு நகருக்குள் நுழைவதற்கான  கோட்டைமுனைப் பாலம், வெள்ளைப் பாலத்தின் ஊடான அனைத்து போக்குவரத்துகளும் அரை மணித்தியாலம்  தடைப்படுத்தப்பட்டன. 

Fri, 05/03/2019 - 16:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை